Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்..! சத்யபிரதா சாகு தகவல்..!!

Senthil Velan
சனி, 16 மார்ச் 2024 (19:10 IST)
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நாராளுமன்ற தேர்தல் ஒரே கட்ட தேர்தலாக  ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
 
இடைத்தேர்தல் கிடையாது:
 
இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதியில் ஏப்ரல் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது என்றும் அவர் கூறினார்.
 
இப்தார் நிகழ்ச்சியில் வாக்கு சேகரிக்க கூடாது:
 
பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் தேர்தல் நேரத்தில் பணிகளை தொடங்க உள்ளனர் என்றும் 85 வயதிற்கு மேல் உள்ள முதியோர்கள் விட்டிலிருந்தே தபால் மூலம் வாக்கு செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது என்று சத்யபிரதா சாகு குறிப்பிட்டார்.
 
தேர்தல் நடத்தை விதி அமல்:
 
மேலும், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை (மார்ச் 18) ஆலோசனை நடத்தப்படும் என்றும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது என்றும்
அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.

ALSO READ: விஞ்ஞான முறையில் ஊழல்..! பாஜக மீது நாராயணசாமி புகார்..!!

18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நாளைதான் கடைசி நாள் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments