Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டி..! விருப்ப மனு தாக்கல்..!

Senthil Velan
செவ்வாய், 5 மார்ச் 2024 (13:59 IST)
நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பமனு அளித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விருப்ப மனுக்களை கடந்த 1-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பித்து வருகின்றனர். 
 
மத்திய சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாநிதி மாறன் எம்.பி, மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தார். மேலும் வட சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார்.  கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விசிக-வில் இருந்து நீக்கம்..!
 
முன்னதாக அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்ற கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments