Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை..! பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு..!!

Senthil Velan
சனி, 6 ஏப்ரல் 2024 (17:14 IST)
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாகவும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.700-ஆகவும் உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
 
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 
 
அதில், புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும், பா.ஜ.க.வின் வணிகமயமான, மத ரீதியிலான கல்வித் திட்டங்கள் திரும்பப் பெறப்படும், நிதி ஆயோக்கை கலைத்துவிட்டு, திட்டக்குழு மீண்டும் ஏற்படுத்தப்படும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாகவும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.700-ஆகவும் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ALSO READ: முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை நினைவூட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..! பிரதமர் மோடி விமர்சனம்..!

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

விஷச்சாராயம் விவகாரத்தல் விக்கிரவாண்டியில் திமுக தோல்வி அடையும்..! ஹெச்.ராஜா

நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெறிந்த பாஜக உறுப்பினர்... சென்னை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..! ஜெயக்குமார் வலியுறுத்தல்..!!

கள்ளச்சாராய விவகாரம்.! வி.சி.க. போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments