மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா..? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!!

Senthil Velan
வெள்ளி, 29 மார்ச் 2024 (13:48 IST)
மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரியில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொன்னேரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து பட்டியலிட்டு அவர்,  திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
 
பாஜக ஆட்சியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய உதயநிதி,  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
 
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டி முடிக்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.   

ALSO READ: தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்வு..! பிரதமர் மோடி..!

மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments