திமுக விருப்ப மனு தாக்கல்.! இன்றே கடைசி நாள்.!!

Senthil Velan
வியாழன், 7 மார்ச் 2024 (12:18 IST)
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும்.
 
மக்களவைத் தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விருப்ப மனுக்களை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர்.
 
இதுவரை நூற்றுக்கணக்கானோர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி விருப்ப மனு  தாக்கல் செய்தார். அதேபோல் அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு விருப்ப மனு தாக்கல் செய்தார். 

அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை சமர்ப்பித்தார். சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களின் மகன் அலெக்ஸ் அப்பாவு, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.

ALSO READ: வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்..! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்.!!

ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments