திமுகவுடன் பேச்சுவார்த்தை.! 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்.. திருமாவளவன்..!!

Senthil Velan
திங்கள், 12 பிப்ரவரி 2024 (17:08 IST)
மக்களவை தேர்தலில் மூன்று தனித் தொகுதிகளும், ஒரு பொது தொகுதி என நான்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டி ஆர் பாலு தலைமையிலான திமுக தேர்தல் குழுவினருடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
 
பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியாளிடம் பேசிய அவர்,  தாங்கள் போட்டியிட விரும்பிய தொகுதிகளுக்கான பட்டியலை திமுக தேர்தல் குழுவிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
 
தனித் தொகுதிகள் மூன்று, பொது தொகுதி ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள்b கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

ALSO READ: சைதை துரைசாமி மகனின் உடல் மீட்பு.. 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!!
 
மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் தெரிவிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்னாரா?

சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல்!.. ஈரான் அதிரடி..

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து தாக்கிய ஈரான்.. கமேனியின் மறைவுக்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என சூளுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments