தேர்தல் முடிந்ததும் பணம் கொண்டு செல்லலாமா..? அதிரடி ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்

Senthil Velan
திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:23 IST)
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தாலும், ஜூன் 4 ஆம் தேதி வரை பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு தொடரும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தொடருமா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும், பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ALSO READ: விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு..! இடைத்தேர்தல் நடத்தப்படுமா.?
 
மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக தேர்தல் சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தில் இதுவரை 208 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments