கேட்டது 3.. கொடுத்தது 2.. திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து..!!

Senthil Velan
வெள்ளி, 8 மார்ச் 2024 (13:44 IST)
மக்களவைத் தேர்தலில் திமுக விசிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.  கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று மதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்தி வந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு க ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை அடுத்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ALSO READ: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு..! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!!
 
ஒரு பொது தொகுதி உட்பட 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி வந்த நிலையில், 2 தொகுதிகளை திமுக ஒதுக்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments