Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி..! பாஜகவிற்கு வேலையே இல்லை.! எஸ்.பி. வேலுமணி...

Senthil Velan
சனி, 23 மார்ச் 2024 (16:05 IST)
கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
 
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமாரும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.
 
கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்றார்.
 
பாஜகவை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் அவர்களின் ஓட்டு 4% சதவீதம் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் கோவையில் இல்லவே இல்லை  என்று அவர் குறிப்பிட்டார்.

ALSO READ: சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!
 
ஆகவே நான் கூறியது போல போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டும்தான், பாஜகவிற்கு இங்கு வேலையே இல்லை என்று எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments