40 தொகுதிகளிலும் மனுக்கள் ஏற்பு.! எந்த கட்சி வேட்பாளர்கள் தெரியுமா..?

Senthil Velan
வியாழன், 28 மார்ச் 2024 (13:20 IST)
40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
 
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும்  ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் 1,749 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
 
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. வேட்பு மனுவில் குளறுபடி, ஏதேனும் புகார்கள் இருந்தால் அந்த மனுவை தேர்தல் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ALSO READ: அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு நிறுத்தி வைப்பு..!
 
இந்நிலையில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments