Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்வெட்டி பிடித்த விவசாயி நான் விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும்-எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்!

J.Durai
திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:30 IST)
மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
மேடைக்கு வந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ், மயிலாடுதுறை  தேமுதிக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் ஜலபதி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 
 
நிகழ்ச்சிகள் பேசிய எடப்பாடி பழனிச்சாமி
கொரோனா பெருந்தொற்று காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.12,110 கோடி விவசாய படங்களை தள்ளுபடி செய்தது அதிமுக.
 
50 ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு நீதிமன்ற உத்தரவு மூலம் தீர்வு ஏற்படுத்தி தந்தது அதிமுக அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறியது திமுக அரசு
 
திமுக அழுத்தம் கொடுக்க தவறிய காரணத்தால் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா முறையாக தண்ணீர் வழங்கவில்லை
 
ஸ்டாலினுக்கு டெல்டா விவசாயிகளைப் பற்றியோ தமிழக மக்களைப் பற்றியோ கவலையில்லை . அவருக்கு தேவை மத்தியில் ஆட்சி அதிகாரம் மட்டுமே
 
விவசாயிகளின் நலனை கருதி 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி முறைப்படுத்தும் குழு அமைக்க வழி வகுத்தது அதிமுக டெல்டா மாவட்டங்களில் தனியார் தொழிற்சாலைகள் வராமல் தடுத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.
 
மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கையெழுத்து இட்டது திமுக அரசு. அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு என்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments