Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தனர் . திருச்சியில் இருந்து 8 மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு உடமைகளை எடுத்துச் சென்றனர்

J.Durai
புதன், 3 ஏப்ரல் 2024 (13:11 IST)
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தேர்தல் பிரச்சாரத்தில் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காகவும் அவற்றை கண்காணிப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம்  8 கம்பெனி துணை ராணுவ படையினர் ரயில் மூலம் திருச்சி வந்தனர்.
 
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்த துணை ராணுவ படையினரை தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி தளவாய் ராஜசேகரன் தலைமையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி துணை தளவாய் திருமதி.கிரிஜா ஆகியோர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர்.
 
ஒரு கம்பெனியில் 90 பேர் வீதம் 8 கம்பெனி துணை ராணுவ படையினர் திருச்சி வந்தனர். 
 
திருச்சியில் இருந்து அவர்கள் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக செல்கின்றனர். 8 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்த நிலையில்  11 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments