Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்களின் ரத்தத்தை ராமதாஸ் உறிஞ்சிவிட்டார் – வேல்முருகன் குற்றச்சாட்டு !

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (14:01 IST)
கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ராமதாஸ் மீது கடுமையானக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

பாமகவில் முக்கியத்தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் பன்ரூட்டி வேல்முருகன். அதன் பின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனும் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியி இணைந்துள்ள பாமகவைக் கடுமையாக விமர்சனம் செய்து திமுக கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது ‘ வன்னியர் சங்கம் ஏழை வன்னியர்கள் கொடுத்த அண்டா குண்டாக்களை வைத்து உருவாக்கப்பட்டது. வன்னியர்களுக்கு உழைத்த தலைவர்களை ராமதாஸ் மறைத்துள்ளார். வன்னிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி அதனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியவர் ராமதாஸ். ஒரு காலத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் மட்டுமே நிலம் வைத்திருந்த ராமதாஸ் இப்போது ராமதாஸ் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ஆனது எப்படி?.. கருணாநிதி ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் அதிமுகவோ அல்லது பாமகவோ வன்னியர்களுக்காக எதுவும் செய்யவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments