Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாட்டை அடுத்து அமேதி – ராகுல் காந்தி மனுத்தாக்கல் !

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (12:07 IST)
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்துள்ளதை அடுத்து அமேதி தொகுதியில் வரும் 10 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் மக்களவி உறுப்பினராக இருந்துவருகிறார். 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இரண்டாவது தொகுதியாக போட்டியிடும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் மார்ச் 4 ஆம் தேதி மனுத்தாக்கல்  செய்தார். அதையடுத்து அவரது இன்னொரு தொகுதியான அமேதியில் அவர் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார் எனக் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் அவருக்குப் போட்டியாக ஸ்மிருதி ராணியை பாஜக நிறுத்தியுள்ளது. அதனால் அந்த தொகுதியில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments