Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் வாரிசு வேட்பாளர்கள் -உஷாராக பதில் சொன்ன பிரேமலதா !

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (12:40 IST)
திமுகவில் அதிகளவில் வாரிசு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது பிரேமலதா விஜயகாந்த் மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.

திமுக போட்டியிடப்போகும் 20 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டது. அதில் திமுக முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளும் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் முன்னாள் பொறுப்பாளர்களின் வாரிசுகளாக உள்ளனர். இது திமுக வாரிசு அரசியலை மீண்டும் கையில் எடுத்துள்ளது என்ற விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.

இதைப்பற்றிக் கேள்வியெழுப்பியபோது பிரேமலதா விஜயகாந்த் மழுப்பலானப் பதிலைக் கூறியுள்ளார். சென்னையில் இன்று தனது பிறந்தநாளைக் கட்சியினருடன் கொண்டாடிய பிரேமலதா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘திமுகவில் வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ளது அவர்கள் விருப்பம். தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்’ என அறிவித்தார்.

திமுகவைக் கடுமையாக விமர்சித்து வரும் பிரேமலதா இந்த விஷயத்தில் மென்மையானப் போக்கைக் கடைபிடித்தது அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது. ஆனால் அதற்கு வேறு சிலக் காரணங்களும் உள்ளதாகத் தெரிகிறது. இன்று மாலை வெளியாக இருக்கும் தேமுதிக வேட்பாளர் பட்டியலில் பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்ட விஜயகாந்த் குடும்பத்தாருக்கே அதிகளவில்  சீட் ஒதுக்கப்படும் என்பதாலேயே இந்தக் கள்ள மௌனம் என்றொருக் கருத்தும் உலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் எப்போது? முக்கிய அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்திய அணி வெற்றியை கொண்டாடியதில் மோதல்.. வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு..!

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி.. அமளிக்கு தயாராகும் எதிர்கட்சிகள்..!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments