Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி தலைமையிலான தி.மு.க அரசு: நீங்களுமா ஓபிஎஸ்?

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (09:47 IST)
முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் ஆளுமை இல்லாத தலைவர் இல்லாததால் இரண்டு திராவிட கட்சிகளில் உள்ளவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் உளறி வருவதை அவ்வப்போது பார்த்து கொண்டுதான் வருகிறோம்
 
புல்வாமா தாக்குதலை பிரதமர் மோடி நடத்தியதாக பிரேமலதாவும், அதிமுக போட்டியிடும் தொகுதியில் தாமரைக்கு ஓட்டு கேட்ட பாஜக நிர்வாகியும், கனிமொழிக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசிய அதிமுக வேட்பாளரும் என அவ்வப்போது பிரச்சார உளறல்கள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் எந்த விஷயத்தையும் நிறுத்தி நிதானமாக பேசக்கூடிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் நேற்று தஞ்சை மக்களவை தாமக வேட்பாளர் மற்றும் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து பேசியபோது, 'எடப்பாடி தலைமையிலான திமுக அரசு' என்று உளறினார். பின்னர் சுதாரித்து கொண்டு 'அதிமுக அரசு' என்று திருத்தி கொண்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் 'நீங்களுமா? என்று கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மேலும் பேசியபோது, ' டீக்கடையில் டீ குடிப்பது போன்று மு.க.ஸ்டாலின் நடித்ததாகவும், யார் காணாமல் போவார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று, ஆவேசமாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments