Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் அமைச்சர் உட்பட மேசை ஏறி ஆட்டம்: ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பழனிச்சாமி

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (15:36 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ர தேர்தலை முன்னிட்டு தனது கட்சியின் வேட்பாளர்களுக்காகவும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 
 
அந்த வகையில் சமீபத்தில் அரக்கோணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆம், அரக்கோணத்தில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். 
 
எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. சமயம் கிடைக்கும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துகொள்வார்கள். உதாரணத்துக்கு வைகோ. அவர் பேசுவதெல்லாம் ஒரு பேச்சா? எந்த அளவுக்குப் பேசினார்?
திமுகவில் இருந்து பிரிந்துபோனவர் இப்போது அங்கே கூட்டணி சேர்ந்திருக்கிறார். அவர் சேர்ந்தது நல்லதுதான். அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய ராசியாக இருக்கும். வைகோ கூட்டணிக்கும் ராசியானவர்.
 
ஸ்டாலின் எங்கள் ஆட்சியையே கலைக்கப் பார்த்தார். சட்டப்பேரவையில் நீங்களே பார்த்திருப்பீர்கள். என்ன ஆட்டம் ஆடினார்? என்னுடைய மேசையின் மீது ஏறி ஆட்டம், பாட்டம். பெண் அமைச்சர் கூட மேசையில் ஏறி நடனம் ஆடினார். இவர்களா நாட்டைக் காப்பாற்ற போகிறார்கள் என ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

அடுத்த கட்டுரையில்
Show comments