Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி ஜெயித்தால் அடுத்து தேர்தலே இல்லாமலே போகலாம் – முதல்வர் ஆதங்கம் !

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (08:31 IST)
பிரதமர் மோடி மீண்டும் வென்றால் அதையடுத்து இந்தியாவில் மீண்டும் தேர்தலே நடக்காமல் கூடப் பொகலாம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

மக்களவைத்தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 21 வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த தேர்தலில் பெரிதும் பேசப்பட்ட மோடி அலை இந்த தேர்தலில் அவருக்கு எதிராக வீசும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மோடி எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதில் குறியாக உள்ளார். அதற்காக நாடு முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேப் போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அன்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தேர்தல் குறித்து பேசியுள்ளார். அதில் ‘ஒருவேளை நரேந்திர மோடி தேர்தலில் மீண்டும் வென்று பிரதமரானால், அதன் பிறகு இந்த நாடு இன்னொரு தேர்தலை காணாமல் கூட போகலாம்.  சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைப் போல தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு ஒருகட்சி ஆட்சிமுறை கொண்டு வரப்படலாம். கடந்த 5 ஆண்டுகளில் இந்த நாடும், ஜனநாயகமும் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மோடி ஆட்சிக்கு வர பாகிஸ்தானுடன் போருக்கு கூட போவார் என்று மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட்டின் இந்த பேச்சு தேசிய அரசியலில் மிகப்பெரியா சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments