Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகம் மனு !

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (13:32 IST)
வேலூர் தொகுதிக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து உடனடியாக அதை நடத்தி முடிக்க வேண்டுமென அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ சி சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் 10 கோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தலை நிறுத்தும் முயற்சிகளில் இறங்கியது தேர்தல் ஆணையம். ஆவணங்களைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி அவரின் ஒப்புதலின் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுவில் அவர் ’பணம் கொடுக்க முயன்ற வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்திருப்பது முறையானது அல்ல’ எனக் கூறியிருந்தார்.ஆனால் தேர்தல் ரத்து சரியானதுதான் எனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இப்போது வேலூர் தொகுதிக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனுக் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments