Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (14:02 IST)
கோவையில் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகள் மீறப்பட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேல், “கோவையில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினரும் வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
 
தேர்தல் பரப்புரை முடிந்தபிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால், அதையும் மீறி ‘தமிழ் நியூஸ்’ என்கிற பத்திரிகை முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தைப் போட்டு கோவை மாவட்டம் முழுவதும் 'திமுக வசமாகும் கோவை' என போஸ்டர் ஒட்டியுள்ளது. இது வெளிப்படையான விதிமீறல். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கோவையில் நியாயமாக தேர்தல் நடைபெறவில்லை. இதனால், கோவையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments