Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி- திரையிடப்படுகிறது

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2010 (15:50 IST)
தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை, ஆதாரத்துடன் படமாக்கி வெளியிட்டு அது குறித்த உண்மை உணர்வை உருவாக்கிவரும் இயக்குனர் சோமிதரனின் புதிய படைப்பான ‘வெடித்த நிலைத்தில் வேர்களைத் தேட ி’ என்ற வரலாற்று ஆவணப் படம் நாளை சென்னையில் திரையிடப்படுகிறது.
FILE

சிங்கள இனவெறியர்களால் எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலக எரிப்பை ‘எரியும் நூல்கள ்’ என்றும், பிறகு முல்லைத் தீவில் தொன்று தொட்டு தமிழர்கள் வணங்கிவரும் கண்ணகி கோயில் குறித்து ‘முல்லைத் தீவ ு’ ஆகிய இரண்டு குறும்படங்களை வெளியிட்டவர் சோமிதரன்.

சோமிதரனின் புதிய படைப்பான வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி திரைப்படம் நாளை சென்னை கோடம்பாக்கம் பாலம் அருகிறலுள்ள பெரியார் சாலையில் அமைந்துள்ள எம்.எம்.தியேட்டரில் மாலை 5 மணிக்கு திரையிடப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பான தமிழரைக் காப்போம் ( Save Tamils Movement) இயக்கத்தினரால் இந்த குறும்படம் வெளியிடப்படுகிறது.

இது குறித்து தமிழரைக் காப்போம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாற ு:

நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய நிகழ்காலமும் நாளைய எதிர்காலமும ் முன்னோக்கி நகர்கின்றது. பெரும்பாலும் தேசிய இன விடுதலைப் போராட்ட வரலாறு ப ல தலைமுறைகளைக் கடந்தே பயணிக்கின்றது. சேனநாயகாவிலிருந்து மகிந்த இராசபக்சே வர ை, சவகர்லால் நேருவிலிருந்து இராகுல் காந்தி வரை என மூன்று தலைமுறைகளைக் கடந்த ு பயணித்து கொண்டிருக்கின்றது தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்.

60 ஆண்டுகாலமாக நடந்துவரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவைச ் சந்தித்து நிற்கும் கட்டம் இது. இத்தகைய நிலையில ், இலங்கை தீவில் இயக்கர ், நாகர ், வேடர் என்ற இனக் குழுக்களாக வாழ்ந்து வந்த ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல ் அதிகாரத்தைப் படிப்படியாக இழந்து எப்படி இன்றைய நிலையை அடைந்திருக்கின்றார்கள ் என்பதை அறிந்து கொள்வதன் மூலமே நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும ், அதன் மேல ் வினையாற்றவும் இயலும். மேலும் நிகழ்காலம ோ, ‘நாகரிக உலகம ்’ என்று சொல்லப்படும ் காலகட்டத்தில் ஒரு இனப்படுகொலையை அனுமதித்த ு, எந்தச் சலனமும் இன்றி கடந்துப் பயணித்துக் கொண்டிருக்கும்போது வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாதத ் தேவையாகின்றது.

வரலாறே நமது வழிகாட்டி.

வரலாற்றை ஆவணப்படமாக ஆக்கியதேன ்?
இன்று தமிழகத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுந்திருக்கும் புதி ய ஆற்றல்களில் பலரும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ’பயங்கரவாதத்திற்கு எதிரா ன போர ்’ என்ற பெயரில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இன அழிப்புப் போர் தீவிரமா க நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில ், இப்போராட்டத்தின் அரசியல் காரணங்களை அறிந்த ு கொள்ள வேண்டிய தேவை உந்தித் தள்ளியபோத ு, வரலாற்று நூல்களைப் படிக்கும் பழக்கம ே இல்லாத இன்றைய தலைமுறையைச் சேர்ந்த எங்களைப் போன்றவர்களால் ஈழத் தமிழரின் விடுதல ை வரலாற்றை விரைவாகத் தெரிந்துகொள்வதற்கென்று காட்சி ஊடகத்தில் ஒரு பதிவு இல்ல ை என்பதை உணர முடிந்தது.

இனப்படுகொலைப் போரும ், அது ஏற்படுத்திய பாதிப்பும் இதன ் தேவையை மேலும் வலியுறுத்தியது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ‘வரலாற்றைச் சுமையா க எண்ணுவதும ், தேவையற்ற ஒன்றாக கருதுவதும ்’ இளைஞர்களின் பொதுக் கருத்தியலா க இருக்கின்றது. இது புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைய தலைமுறைக்கும் பொருந்தும ் என்றே கருதுகிறோம். சாரமா க, இன்றைய நெருக்கடியானதொரு கணத்தில ், இளைய தலைமுறையைப ் போராட்டத்தில் உள்வாங்குவதற்குள்ளத் தடைகளைக் தகர்ப்பதற்கு வரலாற்றைக் காட்ச ி வடிவில் ஆவணப்படுத்துவது உதவும் என்ற நோக்கத்துடனே இந்த படம ் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படம் குறித்து:

FILE
இந்தப் படத்தை திரு.சோமிதரன் அவர்கள் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக ’எரியும ் நினைவுகள்(யாழ் நூலக எரிப்புக் குறித்து) ’, ’முல்லைதீவ ு’ என்று ஈழம் தொடர்பா ன இரண்டு ஆவணப்படங்கள ை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தில ், தமிழர்கள் பூர்வகுடிகளாக இலங்கை தீவில் வாழ்ந்த காலம் தொடங்க ி, பூர்வகுடித் தமிழர்களிடமிருந்து படிப்படியாக அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டவிதம ், 60 ஆண்டுகாலத்திற்குமேலாக நடந்துவரும் தமிழின அழிப்ப ு, ஒப்பந்தங்களும ் ஏமாற்றங்களும ், தமிழர்களின் அறவழி மற்றும் ஆயுதவழிப் போராட்டங்களுக்கான தேவ ை மற்றும் கடந்து வந்தப் பாதை ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் குறிப்பாக தமிழீழக ் கோரிக்கையின் வளர்ச்சியும் அதன் வரலாற்று தேவையும் இந்த ஆவணப்படத்தில ் விளக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிவராத சில அரிய நேர்காணல்களும் இப்படத்தில ் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் நீளம் சுமார் 2.45 மணி நேரம்.

இப்படம் நுணுக்கமான ஆய்வு நோக்கில் அல்லாமல் ஒரு வரிசைப்படுத்தப்பட்ட ஆண்ட ு நிகழ்வுகளின் தொகுப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை உருவாக்க ஏறத்தா ழ ஒராண்டு ஆனது.

இப்படத்தைக் காண்பது என்பது வரலாற்று நூல்களைப் படிப்பதைவிட சற்றே விரைவா ன மற்றும் எளிமையான அனுபவமாக இருக்குமேயன்றி விறுவிறுப்பான திரைப்படத்தைப் போல ் இருக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈழ விடுதலைப் போரட்டத்தின் வரலாற ே, இன்று நம் கையில் இருக்கும் ஆற்றல் வாய்ந் த கருவி என்ற காரணத்தினால ், இந்த வரலாற்று ஆவணத்தை இத்தலைமுறையைச் சேர்ந் த இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை உரிமையோட ு தெரிவித்துக்கொள்கிறோம்.

வரலாற ு நம்மை விடுதல ை செய்யும ்”.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments