Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவே மருந்து மருந்தே உணவு -சினோஜ் கட்டுரைகள்

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (23:28 IST)
நாம் உண்ணும் உணவுப்பொருட்களைப் பொருத்தே நம் உடல் நலம் அமைகிறது.

இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் தன் உடலுக்கு எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்று பகுத்துணர்ந்து எதையும் உட்கொள்வதில்லை.

ஆனால், ஆறறிவுள்ள மனிதனுக்கு அந்தப் பகுத்துணர்வு இயற்கையாய்க் கிடைத்துள்ளது. அதன் மூலம், ஒரு மனிதன் உணர்வுகளையும், உயிரின் தீர்க்காயுசையும் அதிகரிக்கவும் செய்யலாம், அதை அலட்சியமும் செய்யலாம்.

சில நாட்களுக்கு முன், ஓட்டலில் உணவு பிரியாணி சாப்பிட்டவர் மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஒரு சிலருக்கு நன்றாக இருக்கும் உணவே கூட விஷமாகிவிடுவதுண்டு.

அதனால், சுத்தமான முறையில் எப்போதும் வேகவைத்து இறக்கிய உணவை அடுத்த 20 நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதிலும் உணவுப்பொருட்களைச் சூடாகச் சாப்பிடுவதால்தான் உடலுக்கு நன்மை என்று அறிவுறுத்துகின்றனர்.

இவற்றுடன் நல்ல சத்தான உணவுப் பொருட்களை நன்கு சமைத்து சாப்பிட்டு வந்தால், நீண்ட காலத்திற்கு நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும், நோய்  நொடி இல்லாத வாழ்க்கை வாழவே அனைவருக்கும் விருப்பம். அதனால், ரசாயனம் தவிர்த்து, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது,  நம் உடலுக்கு எந்தப் பின் விளைவுகளும் நேராது.

உணவே மருந்து மருந்தே உணவு எனும்போது, எத்தனை வசதி இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் எப்படி?

ALSO READ: நமது உணவுப் பழக்க வழக்கம் !- சினோஜ் கட்டுரைகள்
 
வாயையும் வயிறையும் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால், நடலும் மனமும்  நாம் சொல்வதைக் கேட்கும்.  அதைவிடுத்து, சுகாதாரமற்ற சாலையோர உணவுகள் முதற்கொண்டு, பார்க்கும் எல்லாவற்றையும், வயிற்றில் இடம் கொள்ளாமல்,  நினைத்ததை  எல்லாம் சாப்பிட முயன்றால், உடல் பெருகுவதுடன், ஜீரணக் கோளாறும் ஏற்படும்.

அதனால் பசிக்கும்போது மட்டும் உணவை  உட்கொள்ளும் முறையை கடைபிடித்தால், தேவையின்றி வரும் உடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
அதுவே ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.

 #சினோஜ்
 

தொடர்புடைய செய்திகள்

அடிக்கடி பிரியாணி சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுமா?

ஓசியில் கிடைக்கும் கருவேப்பிலையால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்திற்கேற்ற பழச்சாறுகள் என்னென்ன?

கோடை காலத்தில் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ஈஸியா செய்யலாம் பேச்சிலர் ஸ்டைல் எம்டி குஸ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments