Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு இலக்கிய நோபல் பரிசு

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2011 (15:15 IST)
FILE
2011 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு ஸ்வீடன் இசைக்கவிஞரான தாமஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

80 வயதாகும் டிரான்ஸ்டிரோமரின் இசைக்கவிதைகளில் உலக எதார்த்தை அணுகும் புதிய செறிவான படிமங்கள் இருப்பதாக அறுதியிட்ட நோபல் பரிசுக் குழுவினர் அவருக்கு இந்த ஆண்டிற்கான இலக்கிய நோபலை அறிவித்தது.

1974 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்வீடன் எழுத்தாளர் ஒருவர் நோபல் பரிசை இப்போதுதான் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ்ட்ரோமரின் புகழ் பெற்ற வேலைப்பாடுகளில் "விண்டோஸ் அன்ட் ஸ்டொண்ஸ்" மிகவும் முக்கியமானது என்று இலக்கிய விஅம்ர்சகர்கள் கருதுகின்றனர்.

இவரை பல நாடுகளில் அறிய முடியவிட்டாலும், 50 மொழிகளில் இவரது எழுத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வட அமெரிக்காவில் இவரது எழுத்துக்களுக்கு வரவேற்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments