Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சான்றோர் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும்

Webdunia
புதன், 18 பிப்ரவரி 2009 (12:07 IST)
28 தமிழ்ச்சான்றோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் அறிவித்தார்.

த‌மிழக சட் ட‌ப்பேரவ ையில், ‌‌ நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை தா‌க்க‌ல் செ‌‌ய்து பே‌சிய அமைச்சர் அன்பழகன் இ‌ந்த தகவலை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அ‌வ‌ர் பேசுகை‌யி‌ல், இந்த ஆண்டு குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசஞ்செட்டியார், மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கர தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், ராய.சொக்கலிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புல ிய ூர்கேசிகன், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த.கோவேந்தன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, திருக்குறள்மணி அ.க.நவநீதகிருட்டிணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜமதக்னி மற்றும் ஜெ.ஆர்.ரங்கராஜு ஆகிய 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத்தொகை வழங்கப்படும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments