Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன படைப்பாளி மோ யான் (Mo Yan) என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2012 (19:27 IST)
FILE
2012 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார்.

குவான் மொயே என்ற இயற்பெயருடைய இந்த படைப்பிலக்கியவாதி 1955 ஆம் ஆண்டு பிறந்தார். வட-கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் இவர் பெரும்பாலும் வளர்ந்தார்.

சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது இவருக்கு 12 வயது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு சென்றார். முதலில் விவசாய வேலையைச் செய்த இவர் பிறகு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார்.

1976 ஆம் ஆண்டு வாக்கில் அவர் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்தார். இதில் இருக்கும்போதுதான் இலக்கையங்களை வாசிக்கத் தொடங்கினார், பிறகு எழுதவும் தொடங்கினார்.

இவரது முதல் சிறுகதை 1981ஆம் ஆண்டு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இவரது பெயர் பிரபலமானது.

Touming de hong luob o என்ற நாவல் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது என்றால் 1993ஆம் ஆண்டு இதே நாவல் பிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது.

இவரது எழுத்துக்களில் அவரது இளமைப்பிராய அனுபவங்கள் ஆதிக்கம் செலுத்தின. குறிப்பாக Hong gaoliang jiazu (1987) என்ற நாவலில் இத்தகைய போக்குகளைக் காணலாம் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிறகு 1993ஆம் ஆண்டு Red Sorghum ஆங்கிலத்தில் வெளியானது.

இதில் 5 கதைகள் இடம்பெற்றன. இவர் பிறந்து வளர்ந்த இடமான கவோமி 20ஆம் நூற்றாண்டில் கண்ட பல கொந்தளிப்பான தருணங்கள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொள்ளைக்கலாச்சரம், ஜப்பானிய ஆக்ரமிப்பு, விவசாயக் கூலிகள் வாழ்ந்த மிகவும் கடினமான வாழ்க்கை முறை என்று இந்த நூல் விரிகிறது. ரெட் சோர்கம் என்ற இந்த நூலில் உள்ள விஷயங்கள் சாங் இமூவ் என்பவரால் சிறப்பாக திரைப்பட வடிவத்தில் கொண்டு வரப்பட்டது என்று விமர்சகரக்ள் தெரிவித்தனர்.

Tiantang suantai zhi ge என்ற நாவல் (1988), (ஆங்கிலத்தில் இது The Garlic Ballads 1995), அப்போதைய சீன சமூகத்தையும் அரசியலையும் எள்ளி நகையாடும் Jiuguo (1992) (ஆங்கிலத்தில் The Republic of Wine 2000) என்ற படைப்பிலக்கியம்- இது சமூக ஒழுங்கை குலைப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நாவலாகும்- இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன.

Fengru feitun (1996) என்ற படைப்பு 2004ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் Big Breasts and Wide Hips என்று வெளிவந்தது. இதில் ஒரு குடும்பத்தின் நடக்கும் நிகழ்வுகள் மூலமாக 20ஆம் நூற்றாண்டு சீன வரலாற்றையே எழுதியுள்ளதாக மதிப்பீட்டாளர்கள் வரையறை செய்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டு Shengsi pilao என்ற நாவல் வெளியாந்து இது ஆங்கிலத்தில் Life and Death are Wearing Me Out என்று ஆங்கிலத்தில் வெளியானது. இதில் இருண்ட ஒரு நகைச்சுவை வெளிப்பட்டுள்ளது. அதாவது தினசரி வாழ்வு அபத்த சுவை, அவலச்சுவையுடன் எடுத்தாளப்பட்டுள்ளது. இளம் வயதினரின் குடியரசில் நிகழும் உருமாற்ற வித்தைகள் இதன் முக்கிய அம்சமாகும்.

2004 ஆம் ஆண்டு Tanxiangxing என்ற நாவல் வெளிவந்தது. உடையும் பேரரசில் மனித கொடூரங்கள் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் 2013ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் Sandalwood Death என்று வெளியாகவுள்ளது.

2009 ஆ,ம் ஆண்டு இவர் எழுதிய Wa என்ற நாவலில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சீன அரசின் கொள்கையின் விளைவுகள் கையாளப்பட்டுள்ளது.

கற்பனை, மற்றும் எதார்த்தத்தை வரலாற்று/சமூக கோணங்களில் இவர் நாவல் கையாள்கிறது. இலக்கிய மேதைகளான வில்லியம் ஃபாக்னர் மற்றும் 'நூறாண்டு கால தனிமை" புகழ் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்சிய மார்க்வேஸ் ஆகியோரது பாணி இவரது எழுத்துக்களில் காணக்கிடைப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கும் அதே வேளையில் சீன வாய்மொழி கதை மரபு, நாட்டுப்புற கதை மரபு ஆகியவற்றின் தாக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.

இவை தவிர மோ யான் பல சிறுகதைகளையும், பல கட்டுரைகளையும் படைத்துள்ளார். தற்கால எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமான ஒரு படைப்பாளியாகவே மோ யான் கருதப்படுகிறார்.

இவரது கதைகளில் ஒரு வகையான மயக்கநிலை எதார்த்தவாதம் அல்லது பிரமை கலந்த எதார்த்தவாதம் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

Ref: Nobel Prize இணையதளம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Show comments