Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோர்ஜ் லூயி போர்ஹே

Webdunia
ஜோர்ஜ் லூயி போர்ஹே Seven Nights, Dream Tigers, Doctor Brodie's Report; other inquisitions, The book of Imaginary Being; Labyrinth s போன்றவை இவரது படைப்புகளுள் அடங்கும். போர்ஹே தன் இளம் பிராயத்தில் மேற்கொண்ட தொலைதூரப் பயணங்களை குறிப்பாக அவரின் ஜெனிவா அனுபவங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஜெனிவாவில்தான் அவர் கான்ராட் ( Conra d), பூதலியார் ( Baudelair e), ஜாய்ஸ் ஆகியோரைக் கண்டறிந்து நவீனத்துவ எழுத்தின் சர்வதேசியத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டதாகப் பதிவு செய்துள்ளார்.

உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த உரையாடல் 1982-ல் டப்ளினில் நடந்தது. இதில் போர்ஹே. Richard Kearne y k‰W« Seamus heane y ஆகியோர் பங்கேற்றனர்.


மொழியாக்கம ்

வி.எம்.எஸ். சுபகுணராஜன ்


ரி.கி : இன்று வசந்த காலத்தின் தொடக்கநாள் ( Bloomsda y). ஜாய்சின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக டப்ளின் வந்துள்ளீர்கள். எனவே ஜாய்சிற்கும் உங்களுக்குமான இலக்கிய உறவு குறித்துப் பேச்சைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். 1925-ம் ஆண்டுகளிலேயே ஜாய்சை வெற்றி கொள்ள எத்தனித்த முதலாவது ஹிஸ்பானிய எழுத்தாளர் என்று உங்களை நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஜேம்ஸ்ஜாய்சின் படைப்புலகம ், நவீன ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றினூடான தங்களது பயணம் குறித்து விளக்க முடியும ா?

ஜோ : நாம் 1920-களின் தொடக்கத்திற்குச் செல்வோம். சில்வியாபீச் பாரீசில் யுலிஸ்-ன் முதல் பதிப்பை வெளியிட்டிருந்தார். அதை ஒரு நண்பர் எனக்குக் கொடுத்தார். என்னால் முடிந்த மட்டும் அதனை வாசிக்க முயற்சித்தேன். ஆனால தோல்விதான் மிஞ்சியது. வாசிக்கத் தொடங்கியவுடனேயே என் முன் இருப்பது ஒரு ஆற்புதமான ஆனால் அதே வேளை இம்சிக்கும் புத்தகம் என உணர முடிந்தது. இது எதைப்பற்றிய புத்தகம் என்று என்னையே கேட்டுக் கொண்டேன். யுலிசஸ் பற்றிய நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு வேளையும் அதன் கதை மாந்தர்கள் நினைவிற்கு வருவதில்லை. மாறாக ஸ்டீபன ், மோல ி, புலூம் முதலான கதாபாத்திரங்களை உருவாக்கிய அந்த எழுத்துக்களே என்னை ஆட்டிப்படைத்தது. ஆ க, ஜேம்ஸ்ஜாய்ஸ் பிரதானமாக ஒரு கவிஞர் என்ற முடிவிற்கு வரச் செய்தது. அவர் உரைநடையில் கவிதையை வார்த்தெடுக்கிறார். Finnegans Wake, Pomes Penyeach ஆகிய புத்தகங்களைக் கண்டதும் இநத எண்ணம் மேலும் வலுப்பெற்றது.

நான் கான்ராட ், டால்ஸ்டாய ், டிக்கன்ஸ் ஆகியோரைக் கணிக்கும் போது அவர்களது காத்திரமான பாத்திரப் படைப்ப ு, உரை நடையின் கர ு, உள்ளடக்கம் குறித்துக் கவனம் கொள்கின்றேன். ஆனால் ஜாய்சில ், குவிமையம் அதன் வடிவநேர்த்த ி, மொழிநட ை, நினைவிலிருந்து அகலா த, ஓசை நயமிக்க கவிதையாகப் பரிணமிக்கத் துடிக்கின்றஅவரது வரிகளின் மீதானதாக மாறி விடுகிறது. ஜாய்சை சந்தித்த பிறகு எனது அறுபதாண்டு கால எழுத்தைப் பின்னோக்கினால ், வார்த்தைகளின் மீதான மயக்கத்தை அவரோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்றேபடுகிறது. எனது மொழியானது கவிதையின் வரையறைக்குட்பட்டு வார்த்தையின் அத்தனை கிளர்ச்சியூட்டும் பரிமாணங்களையும் சொற்களின் மூல ஓசைகளையும் ( Etymalogical echoe s) அவற்றின் முடிவற்ற ஒலியதிர்வுகளைக் கொண்ட கவித்துவ நடையொன்றைப் பெற்றிருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எனது கதாபாத்திரங்கள் பெரும்பாலான நேரங்களில் வார்த்தைகளுடன் விளையாடுவதற்கான சாக்கா க, மொழியின் புனைவுலகில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பாக மட்டுமே உள்ளனர்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments