விஸ்வரூபம்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு....

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (18:55 IST)
நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

 

 
கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில், கமல் இயக்கி 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘விஸ்வரூபம்’. பல  தடைகளைக் கடந்து இந்தப் படம் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட இந்தப்  படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  
 
இந்தப் படத்தை எடுக்கும்போதே அடுத்த பாகத்துக்கான 40 சதவீத காட்சிகளை கமல் எடுத்துவிட்டார். எனவே, 2013ஆம் ஆண்டே  இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால், தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட பண பிரச்னையால்,  படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன.
 
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கமல், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கிவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு  படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு  மற்றும் ஹிந்தி மொழிகளின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என ட்விட்டரில் அறிவித்திருந்தார் கமல்ஹாசன்.
 
அதன்படி விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். 


 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

அடுத்த கட்டுரையில்
Show comments