நீட் தேர்வுக்கு எதிராக திடீரென பொங்கிய சூர்யா: விஜய் தான் காரணமா?

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:18 IST)
நீட் தேர்வுக்கு எதிராக திடீரென பொங்கிய சூர்யா: விஜய் தான் காரணமா?
நீட் தேர்வுக்கு எதிராக திடீரென சூர்யா பொங்கியதற்கு விஜய்தான் காரணம் என்று கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தளபதி விஜய் தான் அடிக்கடி சமூக கருத்துக்களை ஆடியோ லாஞ்ச் மூலமும் பேட்டிகள் மூலம் தெரிவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய படங்கள் ஏற்படுத்தும் பரபரப்பை விட அவருடைய பேட்டிகள் மற்றும் பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தும் 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்த பின்னர் அவர் எந்த விஷயம் குறித்தும் கருத்து தெரிவிப்பதில்லை, அமைதியாகவே உள்ளார். எனவே விஜய்யின் இந்த பாணியை சூர்யா தற்போது கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது 
 
சமூக கருத்துக்களில் பரபரப்பான கருத்தை தெரிவித்தால் மட்டுமே மாஸ் நடிகராக முடியும் என்பதற்கு விஜய் ஒரு உதாரணமாக இருப்பதால் அதே பாணியை நாமும் பின்பற்றினால் நாமும் மாஸ் நடிகராகலாம் என்ற எண்ணத்தில் சூர்யா திடீரென நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது
 
ஒரு பக்கம் சூரரைப்போற்று படத்தின் ஓடிடி ரிலீஸை மறைக்க பரபரப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டாலும், நீட் தேர்வுக்கு எதிராக திடீரென பொங்கியதற்கு உண்மையான காரணம் விஜய் போன்ற நடிகராக வேண்டும் என்பதற்காகவே என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4000 கோடி சொத்துக்கு அதிபதி! நாகர்ஜூனாவை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கம்

நெரிசலில் சிக்கிய நடிகை நிதி அகர்வால் விவகாரம்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

KGF இணை இயக்குனரின் 4 வயது மகன் லிப்டில் சிக்கி உயிரிழப்பு.. என்ன நடந்தது?

’பராசக்தி’ படத்தின் வில்லன் கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்தது ஜெயம் ரவி இல்லை: சுதா கொங்கரா..

சுற்றி வளைத்த கூட்டம்.. துப்பட்டாவை பிடித்து இழுத்த ரசிகர்கள்.. தர்மசங்கடத்தில் நடிகை நிதி அகர்வால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments