தல படத்தில் ஒல்லி இசையமைப்பாளருக்கு வாய்ப்பில்லையா?

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (16:05 IST)
தலயின் புதிய படத்தில், ஒல்லி இசையமைப்பாளருக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.

 
இரண்டெழுத்து இயக்குநரின் படத்தில் நான்காவது முறையாக நடிக்க இருக்கிறார் தல. ஒருவரைப் பிடித்துவிட்டால், அவரை விட்டு விலக மாட்டார் தல. அந்த அடிப்படையில்தான் இயக்குநருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இயக்குநரைப் போலவே ஒளிப்பதிவாளருக்கும் தலயுடன் இது நான்காவது படம். ஆனால், இரண்டாவது படத்தில்தான் வந்து சேர்ந்தார் ஒல்லி இசையமைப்பாளர். அந்தப் படத்தில் அவர் போட்ட பாடல்கள் நன்றாக இருந்தாலும், அடுத்த படத்தில் போட்ட பாடல்கள் கவரும்படி இல்லை.
 
எனவே, புதிய படத்தில் ஒல்லி இசையமைப்பாளரைக் கழற்றி விட்டுவிட்டார்களாம். அவருக்குப் பதிலாக ராகதேவனின் இசை வாரிசை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். சிறிய இடைவேளைக்குப் பிறகு களமிறங்கியிருக்கும் வாரிசு, நிச்சயம் சூப்பர் ஹிட் பாடல்களாகக் கொடுப்பார் என்று நம்புகிறார்கள் தல ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

அமைச்சர் கே.என்.நேரு மீது இன்னும் வழக்கு பதியவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

மகள் நிச்சயதார்த்தம் ஜாலியா போனாலும் சரண்யாவுக்கு இப்படியொரு வருத்தமா? போட்டுடைத்த கணவர்

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த நடிகை திடீர் தற்கொலை.. குடும்ப பிரச்சனையா?

‘முதல்வன்’ சூட்டிங் மட்டும்தான் ரகுவரன் கரெக்ட் டைமுக்கு போனாரு.. காரணத்தை சொன்ன ரோகிணி

அடுத்த கட்டுரையில்
Show comments