ட்விட்டரில் சீறிய வம்பு நடிகர்

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (15:51 IST)
தன்னுடைய அடுத்த படம் பற்றி பொய்யான தகவலை எழுத வேண்டாம் என ட்விட்டரில் சீறியுள்ளார் வம்பு நடிகர்.



 
மலையாள தேச இயக்குனர் இயக்கத்தில் வம்பு நடித்து வெளியான மூணு ‘ஏ’ படம் படுமொக்கையாக இருந்ததால், வம்புவையும், ஆதிக்கையும் கழுவி ஊற்றினர் ரசிகர்கள். இனிமேல் வம்புவை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வர மாட்டார்கள் என்கிற அளவுக்கு இருந்தது அந்தப் படம். எனவே, வம்புவின் அடுத்த படம் குறித்து ஏகப்பட்ட யூகங்கள் வெளியாகின.

முதலாவது, நடிப்பதை நிறுத்திவிட்டு வேறொரு நடிகரை வைத்து இயக்கப் போகிறார். இரண்டாவது, பாதியில் கைவிடப்பட்ட ‘கெட்டவன்’ படத்தை தூசி தட்டி மறுபடியும் இயக்குகிறார். மூன்றாவது, ‘பில்லா 3’ படத்தில் நடிக்கிறார். இவை தவிர்த்து, இன்னும் சில தகவல்களும் உலாவிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், “மீடியாக்களுக்கு தாழ்மையான வேண்டுகோள். யூகத்தின் அடிப்படையில் என்னுடைய அடுத்த படம் பற்றிய எந்த செய்தியையும் எழுத வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். உங்கள் ஆதரவிற்கு நன்றி” என ட்விட்டரில் பொங்கியுள்ளார் வம்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments