Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருட்டு அறையில் வேண்டாம்: ஓவியாவுக்கு ரசிகர்கள் அறிவுரை

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (04:44 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய புகழை பெற்ற ஓவியா, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மனம் இல்லை என்றும், ஆனால் விரைவில் திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.



 
 
இந்த நிலையில் கவுதம் கார்த்திக் நடித்த 'ஹரஹர மகாதேவா' படத்தின் இசை வெளியீட்டின்போது அதே நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் டைட்டில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்றும் அறிவிக்கப்பட்டது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படை என அமைக்கப்பட்ட ரசிகர்கள் இந்த டைட்டிலை கேட்டு அதிருப்தி அடைந்தனர். ஓவியாவின் தாய்மொழி மலையாளம் என்பதால் இந்த டைட்டிலின் அர்த்தம் தெரிய வாய்ப்பில்லை என்றும், ஒன்று டைட்டிலை மாற்ற வேண்டும் அல்லது ஓவியா இந்த படத்தில் நடிக்க கூடாது என்றும் டுவிட்டரில் அறிவுரை கூறி வருகின்றனர். ஓவியாவுக்கு இந்த அறிவுரை சென்று சேருமா? ஓவியா என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments