Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலக்கத்தில் சின்ன நம்பர் நடிகை

கலக்கத்தில் சின்ன நம்பர் நடிகை
, வெள்ளி, 16 ஜூன் 2017 (16:37 IST)
வருமான வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருப்பதால், கலக்கத்தில் இருக்கிறாராம் சின்ன நம்பர் நடிகை.




2010 – 2011ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தபோது, சில படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாயை மறைத்துவிட்டார் சின்ன நம்பர் நடிகை. வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. எனவே, அதையும் சேர்த்து வருமானக் கணக்கில் திருத்தம் செய்து சமர்ப்பித்தார் சின்ன நம்பர் நடிகை.

ஆனால், ‘நாங்கள் விசாரணை செய்த பிறகுதானே திருத்தம் செய்தீர்கள்?’ என்று கோபப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அவருக்கு ஒரு கோடியே 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். எனவே, அதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் முறையிட்டார். திருத்தம் செய்து சமர்ப்பித்துவிட்டதால், அபராதம் செலுத்தத் தேவையில்லை என தீர்ப்பாயம் கூறியது. ஆனால், அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இந்த வழக்கில், வருகிற 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. எப்படி தீர்ப்பு வருமோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராம் சின்ன நம்பர் நடிகை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 4 கோடி சம்பளம் கேட்கும் லண்டன் நடிகை