Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டான்ஸ் மாஸ்டர் வலையில் வீழ்ந்த மும்பை நடிகை?

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (11:57 IST)
மும்பையில் இருந்துவந்து, ஒரே படத்திலேயே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை, டான்ஸ் மாஸ்டரின் காதல் வலையில் வீழ்ந்துவிட்டார் என்கிறார்கள்.


 

 
ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மும்பை நடிகை. ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி இவர். நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி ஜோடியாக ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இந்த நடிகை, ‘ஷிவாய்’ ஹிந்திப் படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்துள்ளார்.
 
9 வயதில் இருந்தே நடனம் கற்றுவருகிறார் இவர் என்பதை, ‘வனமகன்’ படத்தில் இடம்பெற்ற அவருடைய அறிமுகப்பாடலே சொல்லியிருக்கும். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தவர், பிரபலமான டான்ஸ் மாஸ்டர். அவர் சொன்ன கஷ்டமான மூவ்மெண்ட்களைக் கூட சிங்கிள் டேக்கில் ஓகே பண்ணியதைப் பார்த்து அசந்துவிட்டாராம் மாஸ்டர்.
 
அதனால்தான், கார்த்தி, விஷாலை வைத்து அவர் இயக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் ஹீரோயினாக்கினார். இப்போதெல்லாம், ‘டான்ஸ் கத்துக்கொடுங்க மாஸ்டர்…’ என அவரையே சுற்றிச் சுற்றி வருகிறார் நடிகை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments