நடிகரின் பணத்தில் நாட்டாமை செய்கிறாரா பிரபல தயாரிப்பாளர்...?

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2014 (11:45 IST)
மினிமம் பட்ஜெட், வித்தியாசமான கதை, செறிவான திரைக்கதை என்று தமிழ் சினிமாவின் முகத்தை புதுப்பித்துவரும் தயாரிப்பாளர் அவர். இந்த ஃபார்முலாவில் அட்டகத்திகளையே வெற்றியாக்கியவர். அவரையுமே சினிமாவின் சூது கவ்வியிருப்பதாக சொல்லப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம்.
 
இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த முண்டாசு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஒரு பெரும்புள்ளியின் மகன். கபடி விளையாடி திரையுலகுக்குள் நுழைந்த இவர் மேற்படி தயாரிப்பாளரின் அடுத்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி, சூது கவ்விய இயக்குனரின் புதுப்படத்திலும் அவரையே ஹீரோவாக்கும்படி நிர்ப்பந்திக்கிறாராம் தயாரிப்பாளர். 
 
நடிகர் படத்துக்கு பைனான்ஸ் செய்வதால்தான் இப்படியொரு நெருக்கடியை இயக்குனர்களுக்கு இவர் தருவதாக கொஞ்சம் பலமாகவே குற்றஞ்சாட்டுகிறார்கள்.
 
புது ரூட் போட்டவரே இப்படியொரு பைபாஸுக்கு ஆசைப்படுவதுதான் புரியாத புதிர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

அனிருத் கொடுத்த அந்த உதவி!.. கதறி அழுதேன்!.. விக்னேஷ் சிவன் ஃபீலிங்!..

Show comments