சிரிப்பாய் சிரிக்கும் இணைந்து நடிக்கும் திட்டம்

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2014 (11:06 IST)
சமீபத்தில் நடந்த விருது விழாவில் க்ரவுன்தான் கனமா இருக்கணும், ஹெட் ஹெவியா இருக்கக் கூடாது என்ற சேனாதிபதியின் கமெண்ட் அனைவருக்குமே அதிர்ச்சியளித்தது. தல யை குறி வைத்து தொடுக்கப்பட்ட தாக்குதல் இது என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். சேனாதியதியும், தல யும் இணைந்து நடிக்கணும் என்ற பேச்சு வலுப்பட்டிருக்கும் வேளையில் ஏன் இப்படி பேசினார் என அனைவருக்கும் குழப்பம். 
 
படங்களில் தல யை வாரிக் கொண்டிருந்த சேனாதிபதி ஒருகட்டத்தில் தல யை நெருங்கி வந்ததும், குடும்பமாக கூடி அளவளாவியதும் நடந்தது. அப்போதும் சேனாதிபதியிடமிருந்து தள்ளியே இருந்தார் தல. சும்மா அரசியல் பண்றார் என்று அப்போது கமெண்ட் அடித்திருக்கிறார். சேனாதிபதி திடீரென செட்டுக்கு வந்து தல க்கு வாட்ச் பரிசளித்த போது, அவர் அந்தப் பக்கம் நகர்ந்ததுமே வாட்சை கழற்றி அருகில் இருந்தவருக்கு தந்துவிட்டார். இருவரும் நெருக்கமாக போட்டோவுக்கு போஸ் தந்த போது இருவரின் உள்ளங்களும் வெகு தொலைவில் தள்ளியே இருந்தன. 
 
அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரத்திலும் பேசாமலே தல ஜெயித்துவிட்டதாக சேனாதிபதிக்கு கொஞ்சம் எரிச்சல். அதுதான் விருது விழாவில் வார்த்தையாக வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள். 
 
இதற்கு மேலும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று சொன்னால்... சிரிக்காமல் என்ன செய்வது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

Show comments