Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்பாவோடு மோதினால் திருமணம் கிடையாது : விஷாலுக்கு செக் வைத்த வரலட்சுமி

அப்பாவோடு மோதினால் திருமணம் கிடையாது : விஷாலுக்கு செக் வைத்த வரலட்சுமி

அப்பாவோடு மோதினால் திருமணம் கிடையாது : விஷாலுக்கு செக் வைத்த வரலட்சுமி
, சனி, 24 செப்டம்பர் 2016 (13:05 IST)
நடிகர் சரத்குமாரை, நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய விவகாரம், விஷால்-வரலட்சுமி இடையே விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


 

 
நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் இருந்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
 
நடிகர் சங்க தேர்தலில் விஷால் டீம் வெற்றி பெற்று தற்போது சங்கத்தை நிர்வகித்து வருகின்றனர். அதன்பின்னும் சரத்-விஷால் மோதல் தீர்ந்தபாடில்லை.
 
நடிகர் சங்க பணத்தில் ரூ.3 கோடி வரை சரத்குமார் மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய விஷால், அவரை நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் தூக்கினார். மேலும், நீதிமன்றத்திலும் அவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
 
இதற்கு முன் தனது காதலர் விஷால், தனது தந்தையிடம் மோதிய போதெல்லாம் வரலட்சுமி பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை. ஆனால், நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். இதனால் அவருக்கும் விஷாலுக்கும் இடையே முட்டிக் கொண்டதாம்.
 
தன்னுடைய திருமணம், தனது தந்தை சரத்குமார் ஆசிர்வாதத்துடன் நடக்க வேண்டும் என்று விரும்பும் வரலட்சுமி “ என் தந்தையுடனான உன் உறவை சரி செய்.. பிறகு திருமணம் பற்றி பேசலாம்” என்று விஷாலிடம் கூறி விட்டாராம். 
 
எப்படியும் சரத்குமாரிடம் இறங்கிப் போக மாட்டார் விஷால். எனவே, அவர்கள் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்டவன் கட்டளை- திரைவிமர்சனம்