Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போகாதே போகாதே என் கணவா...

போகாதே போகாதே என் கணவா...
, புதன், 16 ஏப்ரல் 2014 (15:49 IST)
உண்மையாகவே இப்படி அழுது புரண்டும் கேட்காமல் பெட்டி படுக்கையோடு சாண்டல்வுட் காமெடியாரின் படத்தில் ஐக்கியமானாராம் சோலார் ஸ்டார். சாண்டல்வுட்டின் காமெடி என்றால் அடுத்தவரை நக்கலும் நையாண்டியும் செய்வதுதான். அதற்கு பார்ட்னர் ஒருவர் இல்லாமல் நடக்காது. 
 
லட்டு படத்தில் லட்டு மாதிரி சிக்கினார் பவர் ஸ்டார். வார்த்தையாலே அவரை கொத்துக்கறியாக்கினார் சான்டல். பவர் இப்போது சிறைப்பறவை என்பதாலும், இமேஜ் பெருமளவு டேமேஜ் என்பதாலும் அவருக்குப் பதில் சோலாரை செலக்ட் செய்தாராம். 
 
வாயில ஜாங்கிரி வச்சுகிட்டு போஸ் தர்ற அந்தாளை எங்கிருந்தாலும் தூக்கிட்டு வாங்க என இவர் உத்தரவு பிறப்பிக்க, அதற்கு எந்த அவசியமும் இல்லாமல் மனைவியின் பேச்சையும் கேளாமல் சா‌ண்டல் ஹீரோவாக நடிக்கும் படத்தில் காமெடி ஊறுகாயாகியிருக்கிறார்.
 
சும்மாவே அவரை கலாய்ப்பாங்க. சா‌ண்டல்வுட் அவரை என்னப் பண்ணி வச்சிருக்கிறாரோ என்று ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறார் சோலாரின் திருமதி தமிழ்.

Share this Story:

Follow Webdunia tamil