Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (16:01 IST)
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அதில் உங்களுக்கு தெரியாத சில அம்சங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதனை எப்படி செயல் படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

* Archive chat இது குறிப்பிட்ட ஒரு சாட்டினை தற்காலிகமாக மறைத்து வைத்து பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை பயன்படுத்த நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து Archive chat பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

* சில குரூப் சாட்கள் உங்களை வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - ஐ க்ளிக் செய்யலாம்.

* கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த Settings - Account - Privacy - Last seen Option ஐ க்ளிக் செய்து Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

* சாட் மெனுவை அழுத்தி பிடித்தால் அவை Shortcut ஆக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்.

* வாட்ஸ் அப்பில் போட்டோ வீடியோ தானாக தரவிறக்கம் ஆவதை தடுக்க Settings - Chat Settings - Media auto download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.

* உங்கள் குறுந்தகவல் படிக்கப்பட்ட சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) என்ற குறியீடை க்ளிக் செய்தால் போதுமானது.

* சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings - Account - Change Number Option-ல் புதிய நம்பரை சேர்த்து பயன்படுத்தலாம்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

Show comments