Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது ஜி-மெயில்

அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது ஜி-மெயில்
, புதன், 24 ஜூன் 2015 (14:55 IST)
அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த வசதியின் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
அனுப்பிய மெயிலை unsend செய்வதுதற்கு, முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.
 
அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைந்தவுடன் Undo Send என்ற பகுதிக்குள் செய்யுங்கள். அதில் Undo வசதியை Enable செய்யுங்கள். பின்னர் Save Changes பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
 
அதன் பின் நீங்கள் யாருக்காவது மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு செய்தி தானாக தோன்றும். அதில் UnSend என்ற வசதி 30 வினாடிகள் திரையில் தோன்றும்.
 
அப்போது,  நீங்கள் அனுப்பிய மெயிலை திரும்பப்பெற விரும்பினால் Unsend ஆப்ஷனை கிளிக் செய்து திரும்ப பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil