Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசத்தலான தரத்தில்.. அட்டகாசமான விலையில்..! – வருகிறது Nothing Phone 2!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (12:32 IST)
இந்தியாவில் சமீபமாக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நத்திங் நிறுவனம் அடுத்ததாக தனது Nothing Phone 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.



இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் விரிவடைந்ததை தொடர்ந்து பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் கால்பதித்த நத்திங் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட Nothing Phone 1 நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது மேலும் பல வசதிகளுடன் நத்திங் தனது Nothing Phone 2 ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

Nothing Phone 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்;
  • 6.7 இன்ச் அமொலெட் டிஸ்ப்ளே
  • 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8+ Gen 1 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 13
  • 50 எம்பி + 50 எம்பி + 32 எம்பி ட்ரிப்பிள் கேமரா
  • 32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • Sony IMX766 கேமரா தொழில்நுட்பம்
  • 8 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 4700 mAh பேட்டரி, 66W பாஸ்ட் சார்ஜிங்
  • 50W Qi வயர்லெஸ் சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங்

இந்த Nothing Phone 2 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 39,990 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த Nothing Phone 2 ஸ்மார்ட்போன் ஜூலை 11ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் 1.5 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்.. தினசரி ரூ.40 கோடி வருவாய் இழப்பு..!

வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!

சுனிதா வில்லியம்ஸ் உடல்நலன், மனநலனால் சாதனை படைத்துள்ளார்! - இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை!

இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்.. உறவினர் தெரிவித்த தகவல்..!

அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் சம்பளம் கிடையாது: தமிழக அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments