Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியாகிறது Nothing Phone 1! 5ஜி ஸ்மார்ட்போன்! – வியக்க வைத்த ஆப்ஷன்ஸ்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (15:08 IST)
இங்கிலாந்து ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள நத்திங் போன் 1 (Nothing Phone 1 Smartphone) இன்று வெளியாகவுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் புதிய புதிய வசதிகளுடன் பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று வெளியிடும் நத்திங் 1 என்ற 5ஜி வசதிக்கொண்ட ஸ்மார்ட்போன் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Nothing Phone 1 என்ற இந்த ஸ்மார்ட்போன் OLED Displayவுடன் 6.55 இன்ச் நீள ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இதன் பிக்சல் அளவு 1080 x 2400 Pixels ஆகும். Android இயங்குதளம் கொண்ட Nothing OS ஐ கொண்ட இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 778G+சிப்புடன் Octa Core ப்ராசசரையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான RAM வசதிகளுடன் கிடைக்கிறது. 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட மாடல், 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட மாடல், 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் கொண்ட மாடல் ஆகிய மூன்று மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதன் கேமரா சிறப்பம்சங்களாவன Main Camera 50MP (Wide), 16MP (Ultra Wide), செல்பி கேமரா 16MP Wide. மெயின் கேமரா 4K தரத்தில் வீடியோ எடுக்கும் வசதியும், செல்பி கேமரா 1080 தரத்தில் வீடியோ எடுக்கும் வசதியும் கொண்டுள்ளது.

இதுதவிர 4500mAh Battery, Wireless Charging, Screen Finger Lock உள்ளிட்ட பல வசதிகளும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் Black மற்றும் White ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் உத்தேச விலை குறைந்தபட்சம் ரூ.27,000 லிருந்து ரூ.45,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் வெளியீட்டை பலரும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments