அதிரடி அம்சங்களுடன் மிரட்டும் விலையில் நோக்கியா 9!!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (10:40 IST)
நோக்கியா நிறுவனம் மூன்று மாடல் ஸ்மார்ட்போன் மற்றும் நோக்கியா 3310 ஆகிய கருவிகளை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.


 
 
தற்போது, அதனை தொடர்ந்து நோக்கியா பிளாக்ஷிப் கருவியான நோக்கியா 9 ஆண்ட்ராய்டு கருவியை களமிறக்கவுள்ளது.
 
சமீபத்திய தகவலில் இருந்து நோக்கியா 9 கருவியில் ஐரிஸ் ஸ்கேனர், கார்ல் ஜேயிஸ் கேமராக்கள் மற்றும் ஒரு க்வாட் எச்டி  டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் முக்கிய இடம்பெறும் என தெரிகிறது.
 
மேலும், ஐரோப்பிய சந்தைகளில் 749 யூரோ என்ற விலையிலும், ஐக்கிய மாநில நாடுகளில் 699 டாலர்கள் என்றும் மற்றும் இந்தியாவில் ரூ.44,999 என்ற விலை நிர்ணயிக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், பிற நாட்டு விலை நிர்ணயங்களோடு ஒப்பிடும் போது இந்திய விலை நிர்ணயம் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே நோக்கியா 9 வெளியாகலாம்.
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிப்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments