Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.15,499 விலையில் லெனோவா A7-50 டேப்லெட் அறிமுகம்

ரூ.15,499 விலையில் லெனோவா A7-50 டேப்லெட் அறிமுகம்

Ilavarasan

, திங்கள், 9 ஜூன் 2014 (17:27 IST)
லெனோவா நிறுவனம் எ தொடர் டேப்லெட்டான லெனோவா A7-50 டேப்லெட் இந்தியாவில் நிறுவனத்தின் ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது. லெனோவா A7-50குரல் அழைப்பு டேப்லெட் தற்போது ரூ.15,499 விலையில் கிடைக்கிறது மற்றும் உத்தியோகபூர்வ ஸ்டோரில் 8-10 வர்த்தக நாட்களில் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, லெனோவா A7-50டேப்லெட் லெனோவா A7-30, எ8 மற்றும் A10 டேப்லெட் உடன் இணைந்து, ஏப்ரல் மாதம் உலக அளவில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
லெனோவா A7-50 டேப்லெட் ஒற்றை சிம் ஆதரவுடன் குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இப்போது டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது.  1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.  டேப்லெட்டில் ரேம் 1GB உடன் 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் (MT8382) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு உள்ளது. 
 
டேப்லெட்டில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,  2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளடக்கியுள்ளது. லெனோவா A7-50டேப்லெட் இணைப்பு விருப்பங்கள், 3G, Wi-Fi, மைக்ரோ-USB, எ-ஜி.பி. எஸ், GPRS / EDGE, மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். மேலும் லெனோவா A7-50 டேப்லெட்டில் Wi-Fi வேரியன்ட் மட்டுமே அறிவித்துள்ளது, ஆனால் தற்போது, இந்தியாவில் கிடைப்பது மற்றும் விலை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. டேப்லெட்டில் ஒரு 3450mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லெட் மிட்நைட் ப்ளூ வண்ணத்தில் கிடைக்கும்.
webdunia


லெனோவா A7-50டேப்லெட் சிறப்பம்சங்கள்:
 
ஒற்றை சிம்
1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
ரேம் 1GB,
1.3GHz குவாட் கோர் மீடியா டெக் (MT8382) ப்ராசசர்,
microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு,
5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
3G,
Wi-Fi,
மைக்ரோ-USB,
எ-ஜி.பி.எஸ்,
GPRS / EDGE,
ப்ளூடூத்,
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்,
3450mAh பேட்டரி.

Share this Story:

Follow Webdunia tamil