Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தில் ஜியோ குடுத்த ஸ்பெஷல் ஆஃபர்! – 12 ஜிபி ஃப்ரீ டேட்டா!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (12:27 IST)
இன்று காதலர் தினத்தையொட்டி சில ரீசார்ஜ் பேக்குகளில் ஃப்ரீ டேட்டா உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை ஜியோ அறிவித்துள்ளது.

இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் “ஜியோ வேலண்டைன் ஆஃபர்” அறிமுகம் செய்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட சில ப்ளான்களுக்கு மட்டும் 12 ஜிபி ஃப்ரீ டேட்டா மற்றும் மேலும் சில சலுகைகளை ஜியோ வழங்குகிறது.

ஜியோவின் ரூ.349, ரூ.899 மற்ற்ம் ரூ.2999 ப்ளான்களை ரீசார்ஜ் செய்வோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும். அதன்படி மேற்கண்ட பேக்குகளின் வழக்கமான டேட்டாவுடன் 12 ஜிபி 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் Ixigo செயலியில் ரூ.45000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையில் விமான டிக்கெட் புக் செய்தால் ரூ.750 சலுகை அளிக்கப்படும். Ferns and petals தளத்தில் ரூ.799க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு ரூ.150 தள்ளுபடி அளிக்கப்படும்.

மெக் டொனல்ட்ஸில் 199 ரூபாய்க்கு மேல் செலவு செய்பவர்களுக்கு ரூ.105 மதிப்புள்ள பர்கர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் ரெடீம் செய்யப்படும் காலத்திலிருந்து குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும் என்றும், அதன் பின்னர் காலவதி ஆகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு காண்க : https://www.jio.com/en-in/jio-valentines-day-offer-terms-and-conditions

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments