Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிவேக இண்டர்நெட்: ஏர்டெல் மீது ஜியோ புகார்!!

அதிவேக இண்டர்நெட்: ஏர்டெல் மீது ஜியோ புகார்!!
, செவ்வாய், 21 மார்ச் 2017 (15:29 IST)
இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் வழங்குகிறது என கூறும் ஏர்டெல் விளம்பரங்கள் முற்றிலும் பொய் என ரிலையன்ஸ் ஜியோ இந்திய விளம்பர கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. 


 
 
ஏர்டெல் விளம்பரங்களில் அதிகார்ப்பூர்வமாக அதிவேக நெட்வொர்க் (Officially The Fastest Network) என்ற வார்த்தை பயன்படுத்துகிறது.
 
அதிகாரப்பூர்வமாக (officially) என்ற வார்த்தை பயன்படுத்தும் போது அது டிராய் அல்லது தகவல் தொலைதொடர்பு துறையை மட்டுமே குறிக்கும் எனவே ஏர்டெல் போலியான விளம்பரங்களை செய்து வருவதாக ஜியோவின் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ஜியோ குற்றச்சாட்டிற்கு ஏர்டெல் பதில் அளித்துள்ளது, இந்தியாவின் அதிவேக மொபைல் நெட்வொர்க் என ஊக்லா தேர்வு செய்துள்ளது, ஊக்லா நிறுவனம் பிராட்பேண்ட் சோதனை மற்றும் இணையம் சார்ந்த சேவைகளை வழங்குவதில் உலக பிரபலமானது. விளம்பரங்களில் இவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என பதிலதித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனால் உயிருக்கு ஆபத்து: துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கும் மதுசூதனன்!