Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வை-ஃபை வழியாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் புதிய வசதி: விரைவில் அறிமுகம்

வை-ஃபை வழியாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் புதிய வசதி: விரைவில் அறிமுகம்
, செவ்வாய், 9 ஜூன் 2015 (15:10 IST)
வை-ஃபை இண்டர்நெட் வழியாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்ப முறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வை-ஃபை இண்டர்நெட் மூலம் 30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி செல்போனுக்கு சார்ஜ் செய்யும்  பவர் ஓவர் வை-ஃபை (power over WiFi) என்ற நவீன தொழில் நுட்பத்தை  வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
 
இந்த தொழில்நுட்பமானது வழக்கமாக வை-ஃபை ரூட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ பிரிக்வன்ஸி பவரை பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக (Usable direct current (DC) power) மாற்றுவதன் மூலம் செல்போனுக்கு சார்ஜை ஏற்றுகிறது.
 
இதற்கு தற்போதுள்ள வை-ஃபை தொழில்நுட்பத்தை காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்ட வன்பொருள் தேவை என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், ஒரு ரூட்டரிலிருந்து எவ்வளவு மின்சாரத்தை அவுட்புட்டாக எடுக்க முடியும் என்பதை கண்டறிய புதிய மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
 
இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கேமிராவில் 17 அடி தூர தொலைவில் இருந்து சோதனை செய்து பார்த்துள்ளனர். அதிகபட்சமாக 28 அடி தூரத்தில் டெம்பரேச்சர் சென்சார்கள் பேட்டரியை சார்ஜ் செய்வது உறுதியாகியுள்ளது.
 
இவ்வாறு சார்ஜ் ஏறும் போது, வை-ஃபை இண்டர்நெட் வேகத்திலும் எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் வெகுவிரைவில் இந்த தொழில்நுட்பத்தை அன்றாட பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil