Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் தேர்வு செய்ய ஐந்து காரணங்கள்

ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் தேர்வு செய்ய ஐந்து காரணங்கள்
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (13:11 IST)
ரிலையன்ஸ் ஜியோ சிம் மக்களிடையே பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜியோவின் டிடிஎச் சேவை வெளியாகும் போது அதனை தேர்ந்தெடுக்க காரணமாகவிருக்கும் ஐந்து காரணங்களை பார்ப்போம். 


 
 
கட்டணம்:
 
ஜியோ டிடிஎச் சேவையானது தோராயமாக மாதம் ரூ.185/- என்பதை விட குறைவாகத் தான் இருக்கும் என தெரிகிறது. 
 
மற்ற டிடிஎச் சேவைகள் ரூ.275/-ல் முதல் ரூ.300/- வரையிலாக திட்டங்களை வழங்கி கொண்டிருக்கும் போது இது குறைவாகும்.
 
இணைப்புகள்:
 
ரிலையன்ஸ் ஜியோவின் செட்ஆப் பாக்ஸ் சிபிஇ (CPE) சாதனம் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ கோபுரங்களுக்கு மிக நெருக்கமாவே இணைக்கப்படும். 
 
டிடிஎச் சேவைகள் கண்ணாடி இழை இணைப்புகள் மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும்.
 
விருப்பமான பதிவு:
 
டாடா ஸ்கை, ஏர்டெல் போன்ற அனைத்து டிடிஎச் சேவைகளிலும் பதிவு செய்யும் வசதி உண்டு. ஆனால், விருப்பமான பதிவை நிகழ்த்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். 
 
ஆனால், ஜியோ சேவையில் அப்படி கிடையாது. டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒரு வார காலம் வரை பதிவு செய்யலாம்.
 
இலவச சேனல்கள்:
 
ஜியோ டிடிஎச் சேவையின் அடிப்படை தொகுப்பில் 300-க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 
 
வெளியீட்டிற்கு பிறகு திட்டங்களுக்கும் கட்டணங்களுக்கும் ஏற்ப இன்னும் பல சேனல்கள் சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆப்ஸ்:
 
ரிலையன்ஸ் ஜியோ செட்ஆப் பாக்ஸ் ஆனது கூகுளின் ஆண்டராய்டு ஓஎஸ்-ல் இயங்கும். 
மேலும் இதில் விளையாட்டு போன்ற சில டீபால்ட் ஆப்ஸ்கள் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமரே சாப்பிடாமல் தான் இருக்கிறாராம்.... நாம் சாப்பிடலாமா?