ரூ. 51,900-க்கு ஐபோன் 14: எங்க? எப்படி? வாங்கனும்…

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (14:31 IST)
நீங்கள் ஐபோன் 14-ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், இதோ உங்களை மகிழ்விக்கும் ஒரு செய்தி இதில் உள்ளது…


ஆம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் Black Friday விற்பனையின் ஒரு பகுதியாக ஆப்பிள் ஐபோன் 14 ஸ்மார்ட்போன் ரூ.2,500 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. து. இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் விலை குறைப்பிற்கு பின்னர் ரூ.77,400க்கு கிடைக்கிறது.

கூடுதலாக, HDFC வங்கி அட்டை அல்லாத EMI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை - ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்கள் எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.20,500 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கப்பெறும். எக்சேன்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம்.

மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பெறுவதன் மூலம் நீங்கள் ரூ.60,000க்குள் அதாவது ரூ.51,900-க்கு ஆப்பிள் ஐபோன் 14-ஐ எளிதாகப் பெறலாம்.

ஐபோன் 14 சிறப்பம்சங்கள்:
# 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, 2532 x 1170 பிக்சல்கள் தீர்மானம்
# 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி
# ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் சாதனம்
# 12MP அல்ட்ரா வைட் சென்சாருடன் இணைக்கப்பட்ட பின்புறத்தில் 12MP முதன்மை சென்சார்
# செல்ஃபிக்களுக்கு 12MP True Depth கேமரா
# 30 fps வரை 4K டால்பி விஷன் ஆதரவுடன் சினிமா மோட்
# 20 மணிநேர வீடியோ பிளேபேக் நேரம்
# faceID அன்லாக், அவசரகால SOS மற்றும் செயலிழப்பு கண்டறிதல்
# மிட்நைட், பர்பில், ஸ்டார்லைட், தயாரிப்பு சிவப்பு மற்றும் நீல வண்ணம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments