Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2012 (17:01 IST)
FILE
இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 4ஜி தொழில்நுட்பத்திலான அதிவிரைவு வயர்லெஸ் இணைய சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

4 ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் முதன்முதலாக கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.

இந்த தொடக்க விழாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கலந்துகொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.

4 ஜி தொழில்நுட்பம் மூலம் நடமாட்டத்தில் இருக்கும்போது, விநாடிக்கு 100 மெகாபிட்ஸ் அளவு பதிவிறக்க வேகத்தை பெற முடியும். அதேசமயம் நிலையான இடத்தில் இருந்து பயன்படுத்தும்போது, அதன் வேகம் விநாடிக்கு 1 ஜிகாபைட் அளவு இருக்கும் என கூறப்படுகிறது.

பிராட்பேண்ட் வயர்லெஸ் அக்சஸ் அலைக்கற்றையான 4ஜியை, ரூ. 3314.36 கோடிக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஏர்டெல் வாங்கியது. கொல்கத்தா,மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா ஆகிய 4 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கு மட்டுமே இந்த சேவையை வழங்க ஏர்டெல் ஏலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேப்போன்று, ஏர்செல், டிகோனா, ஆகிரீ, குவல்காம் உள்ளிட்ட நிறுவனங்களும் 4ஜி அலைக்கற்றையை ஏலம் பெற்றுள்ளது.

News Summary:
Bharti Airtel, the biggest telecom services company, launched broadband wireless access or BWA services based on 4G technology in Kolkata today.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments