Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4ஜி சேவைக்காக பிரிந்த அம்பானி சகோதரர்கள் கைகோர்ப்பு

4ஜி சேவைக்காக பிரிந்த அம்பானி சகோதரர்கள் கைகோர்ப்பு
, புதன், 3 ஏப்ரல் 2013 (18:24 IST)
FILE
சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு தனித்தனியே தொழில் செய்துவந்த அம்பானி சகோதரர்கள் முதன்முறையாக 4ஜி சேவைக்காக ரூ.1200 கோடிக்கு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டு இணைந்து களமிறங்குகின்றனர்.

பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின்னர், அவரது மகன்கள் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் கடந்த 2005 ஆம் ஆண்டில் சொத்துகளை பிரித்துக் கொண்டு பிரிந்தனர். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ஆப்டிகல் பைபர் கேபிளை பதித்துள்ளது. இதன் மூலம், அந்நிறுவனம் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது.

முகேஷ் அம்பானியும் 2010 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு துறையில் காலடி பதித்தார். ரிலையன்ஸ் ஜியோ என்ற அவரது நிறுவனம் 4ஜி சேவைகளை வழங்க உள்ளது. இந்நிறுவனத்துக்கு புதிதாக ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதிப்பதற்கு பதிலாக, அனில் அம்பானி நிறுவனத்தின் ஆப்டிகல் கேபிள்களை பயன்படுத்தி கொள்ள முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1,200 கோடியை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு வழங்கும். இதுதவிர ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய ஒப்பந்தத்தால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் விலை 17.08% உயர்ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil